அரசு என்றாலே மெத்தனம்தானா?

0
35

போபாலில் கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம்தேதி யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 3 ஆயிரத்து 787 பேர் பலியானார்கள். 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பல்லாயிரம் பேர் பார்வை உட்பட நிரந்தர பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இதுதொடர்பான வழக்கில் உயிரிழந்தோருக்கு அதிகபட்சமாக ரூ.42 ஆயிரம், பாதிக்கப்பட்டோருக்கு ரூ.26 ஆயிரம் என ரூ.762 கோடி அந்நிறுவனத்தால் நஷ்டஈடாக வழங்கப்பட்டது. 34 ஆண்டுகள் கழித்து இப்போது மத்திய அரசு கூடுதலாக 7 ஆயிரத்து 844 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவன பங்குகளை எவரெடி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் விலை கொடுத்துவாங்கி பின்னர் அந்நிறுவனத்தை மேக்சியோடு ரசல் என்ற நிறுவனத்துடன் இணைத்தனர். தற்போது அவற்றை டோவ் என்ற நிறுவனம் விலை கொடுத்து வாங்கியுள்ளது.

யூனியன் கார்பைடு தொடங்கி டோவ் நிறுவனம் வரை எல்லா நிறுவனங்களையுமே எதிர்மனுதாரர்களாக சேர்த்து இப்போது மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அப்போதே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு பெற்றிருக்க முடியும். 4 கை மாறிவிட்ட கம்பெனியிடம் இவர்கள் எப்போது, எப்படி நஷ்டஈடு பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த காலத்தில் நஷ்டஈட்டுத்தொகையை வழங்கப்போகிறார்கள்? மத்திய அரசு என்றாலே மெத்தனம்தான் என்ற நிலை எப்போது மாறப்போகிறது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here