அறிஞர் அண்ணா நினைவு நாள் : அதிமுக & திமுக அஞ்சலி

0
43

அறிஞர் அண்ணாவின் 50வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அது போல் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அண்ணா சமாதி நோக்கி இன்று அமைதிப்பேரணி நடைபெற்றது .

அண்ணாவின் 50வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. ஆங்காங்கே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது படத்துக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை (3–ந்தேதி), சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலகர்த்தாவும், திமுக வின்முதல் முதல்வருமான அண்ணாவின் 50ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதி வரை திமுகவினர் அமைதிப்பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் திமுக வின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமைத் தாங்கினார். காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த பேரணி ஒருமணிநேரத்திற்குப் பின் மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று அவருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலில் செலுத்தினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here