இட்லி என்னும் உணவின் மகிமையே தனி!

0
47

நாகரீகம் என்ற பெயரில், அந்நிய நாட்டு உணவு கலாச்சாரத்துக்கெல்லாம்  அடிமை யாகி, நாவின் ருசிக்கு மயங்கி, கண்ட வேளைகளில் கிடைக்கிற உணவுகளை எல்லாம் உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிற சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை சமைத்து சாப்பிடுகிற பழக்கத்துக்கும் பலர் ஆளாகி வருகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு, மீண்டும் நமது பண்டைய உணவுமுறைக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் கொழுக்கட்டை, வேகவைத்துச் சாப்பிடும் உணவுகள், வெந்தயக்கலி, உழுந்தங்கலி. இதனுடன் கருப்பட்டியையும் சேர்த்துச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இவ்வாறு பலவகையான உணவுகள் உள்ளன. இந்தத் தொகுப்பில் வேகவைத்த உணவானதுதான் 700 ஆண்டுகள் பழமையான இட்லியாகும். இந்த இட்லி என்னும் உணவின் மகிமையே தனி!

உலகம் முழுக்க சுத்தி வந்தாலும், ஸ்டார் ஹோட்டலில் தங்கி சாப்பிட்டாலும் ஈடாகாத உணவு எது என்றால் அது மனையில உட்கார்ந்து கண்ணை கசக்கி, அடுப்புல வெந்து, வெளியில வந்து வெள்ளைத் துணியோடு ஐக்கியமான வெள்ளை இட்லியைத் தண்ணி தெளிச்சு எடுத்து ஒரு விள்ளல் வாயில போட்டா ஆஹா…சொல்வதை கேட்டு இருக்கிறீர்களா?. இந்த வெள்ளை இட்லி பல்லு போன பாட்டியும். பொக்கைவாய் குழந்தையும் சேதாரமில்லாம சாப்பிடலாம் என்பதுதான் விசேஷம்…இது உருவான இடம் இதுதான் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. … இந்தோனேஷியாவில இதை கெட்லின்னு சொல்றாங்க.. நம் நாட்டில் இட்டு +அவி= இட்லின்னு சொல்கிறோம் என்கிறார்கள் .

இந்த இட்லியில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா?

60 – 70 கலோரிகள், 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 1 மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியன உள்ளன.

தினமும் 4 இட்லி சாப்பிட்டால் 300 – 350 கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிடுவதனால் அனைத்து சத்துக்களும் சரியான அளவில் நமக்குக் கிடைக்கிறது.

இத்தனைக்கும் அரிசியும் உளுந்தும் கலந்த சாதாரண மாவுதான். ஆனா அசாதாரண பலன் இதில் இருக்கும். இங்கிலாந்தில் தேசிய உணவு திட்டத்தின் கீழ் நம் பாரம்பரிய உணவு வகைகளான இட்லியும் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இட்லியின் பயனை தெரிந்து கொள்ளலாம். நோயில்லாமல் வாழவும்.. நோய் வந்தவர்களுக்கும் மிகச் சிறந்த உணவு என்னும் பட்டியலில் ஆண்டாண்டு காலம் இட்லி முதலிடத்திலேயே இருந்து வருகிறது. இந்த இட்லிக்கு சீஸனே கிடையாது. வருடம் முழுவதும் இட்லியை உணவாக எடுத்துக் கொள்ளலாம். உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எளிதில் செரிமானம் ஆவதில் இட்லி முதலிடத்தில் உள்ளது. ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் உணவு. மேலும் நீராவியில் வேகவைக்கும் இட்லியில் வைட்டமின்கள் மற்றும் சத்துப்பொருள்கள் வீணாவதில்லை என்பதால் இதற்கு மவுசு அதிகம்.

வெளி நாட்டவர்கள் இங்கு வரும்போது இட்லியின் தீவிர ரசிகர்களாக மாறுகின்றனர். இட்லியில் சேர்க்கப்படும் பொருள்களும், செய்யும் முறையும் ஒன்றுதான். வடிவத்தில் மட்டும் வேறுபாடு கொண்டு ஊருக்கு ஊர் இட்லியின் பெயரில் மாற்றம் உண்டு. குஜராத்தில் டோக்ளா, கேரளாவில் வட்டப்பம், மங்களூரில் சன்னாஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய பட்டியலே உண்டு. காஞ்சிபுரம் இட்லி, மல்லி இட்லி, காய்கறி இட்லி, ரவா இட்லி, சில்லி இட்லி, தாளிப்பு இட்லி, இனிப்பு இட்லி என்று வலம் வருகிறது. இட்லி தினம் கொண்டாடப்படுவதன் மூலம் இட்லி மேலும் சிறப்பு பெறுகிறது.

இட்லியை மட்டும் சாப்பிட்டால் சுவையின்றி வெறுமையாக இருக்கும் என்பதால் இதற்கு தொட்டுக்கொள்ள இட்லிபொடி, சட்னி, துவையல் வகை, இட்லிக்கு ஏற்ற சாம்பார் போன்றவை இட்லியுடன் ஜோடி சேருகின்றன. இட்லி ஏன் அவ்வளவு நல்லது என்ற ஆராய்ச்சியில் இறங்கினார்கள். உளுந்து பயறு வகையைச் சேர்ந்தது. அரிசி தானிய வகையைச் சேர்ந்தது. இவை இரண்டும் இணைந்து ஒன்றாக உட்கொள்ளும் போது உடலுக்கு தேவையான புரதம் சமநிலையில் கிடைக்கிறது. அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் சமமாக கிடைக்கிறது.

SAMSUNG TECHWIN DIGIMAX-230

ஆக.. இட்லி மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் அவை இட்லியாக எடுக்கப்படும் போது தான். மாறாக ஃப்ரைடு இட்லி, சில்லி இட்லி, நெய் தடவிய இட்லி என்று எண்ணெயில் பொறித்து சாப்பிடும்போது கலோரிகளின் அளவு அதிகமாகிவிடும். இன்னும் சிலர் இட்லியுடன் வடையும் சேர்த்து சாப்பிடுவார்கள். இதுவும் தவறானது. இட்லி தட்டில் வெள்ளைத் துணியை விரித்து ஆவியில் வேகவைத்து சாப்பிடுங்கள்.

மேலும் நமது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லி பெரும் பங்கு வகிக்கிறது.

நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி நமது தசைகளையும் வலிமையாக வைத்துக் கொள்கிறது.

மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது.

வாய்வுக்கோளாறு இருப்பவர்கள் தினந்தோறும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது.

நமது வயிற்றில் உள்ள புண்கள் சரிசெய்யும் மற்றும் நன்கு செரிமான ஆக இட்லி பெரிதும் உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here