இப்போதாவது சரியாக செயல்பட வேண்டும்…!

0
33
மத்திய அரசு முதல் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகள் வரை வருமுன்னர் காப்போம் என்பதோ, வரும்போது காப்போம் என்பதோ இல்லாமல் வந்த பின்னர் காப்போம் என்பதாக செயல்படுவதால் ஆண்டுதோறும் மழை காலங்களில் வெள்ள சேதம், வெயில் காலங்களில் வறட்சி என்பது தொடர்கதையாக உள்ளது.
தமிழகத்தில் 33 ஆற்றுப்படுகைகள், 52 பாசன நீர்த்தேக்கங்கள் மற்றும் 39 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 25 ஆயிரத்து 600 ஏரிகள் மழை பெய்தால் மட்டுமே நீர் நிறையும் வானம் பார்த்த பூமி வகையை சேர்ந்தவை. தற்போது வெயில் காலம் தொடங்க உள்ளது. அடுத்து ஜூன் மாத மத்திக்கு மேல்தான் தென்மேற்கு பருவமழை பொழியும்.
இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆற்றுப்படுகைகளையும், அணை களையும் தூர்வாராவிட்டாலும் வானம் பார்த்த ஏரிகளையாவது தூர்வாரி ஆழப் படுத்தினால் மழைக்காலத்தில் நீர் வீ ணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
தவிர, இந்த வெயில் காலத்தில்தான் ஏரிகள் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை போன்றவை பெருமளவு நடைபெறும். இந்த தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப் பட்டால் அவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். விழித்துக்கொண்டு செயல்படுமா மாநில அரசு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here