இம்மாசக் கடையில் வங்கி அலுவல்கள் பாதிக்கும்!

0
58

இந்தாண்டின் இறுதியில் அதாவது வரும் டிசம்பர் 21 முதல் 25-ம் தேதி வரை ஒருநாள் தவிர மற்ற நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி அலுவல்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சில வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற உள்ள போராட்டம் காரணமாக 24-ம் தேதி தவிர 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகள் அடங்கியுள்ள 4 சங்கங்களின் கோரிக்கைபடி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வருகிற 21-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.

அதற்கு மறுநாள் 22-ம் தேதி, 4-வது சனிக்கிழமை என்பதால் அன்றும், அதற்கு மறுநாளான ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் அன்றும் சேர்த்து தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. அடுத்து வரும் 24-ம் தேதியான திங்கட்கிழமையன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும்.

அதற்கு அடுத்த நாளான செவ்வாய்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகைகாக விடுமுறை என்பதால் டிசம்பர் 21 முதல் 25-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 4 நாட்களுக்கு வங்கி அலுவல்கள் நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here