எழுத்துலகின் மும்மூர்த்திகள்!

0
192

இன்றைய இளையதலைமுறை யினரிடம் வாசிக்கும் வழக்கம் குறைந்துபோனதற்கு காரணம் அவர்கள் மட்டுமே அல்லர். வாசிக்கும் உலகில் நுழையும் தொடக்கநிலை வாசகனை மிரண்டோடச்செய்யும் படைப்பை நல்கும் எழுத்தாளர்களுக்கும் வாசிப்பை சாகடித்தலில் சம அளவு பொறுப்புண்டு.

சலூன் நாற்காலியில் சுழன்றபடி
பொம்மைகள் உடைபடும் நகரம்
மதனிமார்கள் கதை
பாழி மற்று ழ

இவையெல்லாம் சிறுகதைகள் மற்றும் நாவல்களின் தலைப்புகள். மேற்படி நூல்களை எழுதிய புண்ணியவான் கோணங்கி. யாருக்கும் புரியாமல் ஒரு படைப்பு வெளியாவதில் என்ன பயன்? ரத்தம், பிணம், மாமிசம், நரன் என முற்றுப்புள்ளிகள் இல்லாமல் பக்கத் துக்குப் பக்கம் விளாசித்தள்ளி 500 பக்க தலையணையைப் போன்ற இவைகள் தான் வாசகனை மிரண்டோடச் செய்கின்றன.

தமிழின் முதல் நாவல் வாசிக்க படு சுவாரஸ்யமானது. எல்லோரும் அதை வாசித் திருக்க வேண்டும். அற்புதமான அங்கத நடையில் எழுதிய மாயூரம் முன்சீப்பை விடவா இன்றைய நவீனத்துவவாதிகள் அறிவாளிகள். மேலும் பத்மாவதி சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், தீனதயாளு போன்ற வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியாரைத் தொடர்ந்த நாவல்களும் ஒரே வாசிப்பில் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வல் லமை பெற் றவை.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரவலான கல்வியறிவு மேட்டுக்குடியை ஆங்கில நாவல்கள் பக்கம் உள்தள்ளிற்று. நடுத்தர மக்களின் ஒரே பொழுதுபோக்கு வாசிப்பு மட்டுமே. அதிலும் ஆங்கில நாவல்களைத் தழுவி வெளிவந்த தமிழ் நாவல்கள் பெருமளவு வாசகர்களை உற்பத்தி செய்தன. சென்ற தலைமுறையை நம் பேனாவில் மயக்கிய எழுத்துலகமும் மூர்த்திகளே இந்த நேரத்தில் நாம் நினைவுகூரவேண்டும்.

ஆரணி குப்புசாமி முதலியார்! தமிழில் மிகப்பெரிய நாவலை எழுதியவர் இவர்தான் என்கிறார் புதுக்கோட்டை ஞமூனாலயா கிருஷ்ணமூர்த்தி. ஒன்பது பாகங்களில் இவர் எழுதிய ரத்தினபுரி ரகசியம் ஒரு சாதனை. ஞமூன செல்வம்மாள் என்ற மற்றும் ஒரு நாவல் 5 பாகங் கள். 1867ம் ஆண்டு பிறந்த ஆரணி குப்புசாமி முதலியார் 1925 வரை வாழ்ந்திருக்கிறார். ஆனந்த போதினி என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி னார். இவருடைய தொடர்கதை களுக்காகவே ஆனந்தபோதினி 20,000 பிரதிகள் மாதந்தோறும் விற்றதாம்.

பூட்டிய அறையில் ஒரு தலையணை யோடு நுழையும் ஆரணியார் ஓரிரண்டு நாள் களில் இரண்டு தலையணைகளோடு வெளிவருவாராம். இரண்டாவது தலையணை அவர் எழுதிய நாவல்! பாக்கியம் ராமசாமியின் மேற்படி கூற்று உண்மை என்று நிரூபிக்கும் வகையில்தான் குப்புசாமி தன் குறைந்த வாழ்நாளில் எழுத்துலகில் தீவிரமாக இயங்கி ஏறத்தாழ 75 நாவல்கள் எழுதி யிருக்கிறார்.

ஆரணி குப்புசாமி முதலியாரின் இந்திராபாய் அல்லது இந்திரஜாலக் கண்ணன் என்ற நானூறு பக்க நாவலை அண்மையில் படித்தேன். நானூறு பக்கம் என்பது அவருடைய மற்ற நாவல்களை ஒப்பிடும்போது சிறிது என்றே கருதவேண்டும். இதன் முதல் பதிப்பு 1922லும், இரண்டாம் பதிப்பு 1951லும் வெளிவந்துள்ளது. 2013ல் ஐந்தாம் பதிப்பு கண் டுள்ள இந் நாவல் உங்கள் உணவுவேளை யைக்கூட அபகரிக்கும் உத்தர வாதமான சுவாரஸ்யம் படைத்தது.

அந்தக்கால நாவல்களின் தலைப்புகள் இரண்டிரண்டாக வைக்கப்பட்டிருப்பது ஆச்சரி யம் தருகிறது. பெரும்பாலும் கதா பாத்திரங்களின் பெயரே நாவலின் தலைப்புகளாக இடம்பெற்றுள்ளன. வடுவூரார் என செல்லமாக அறியப்பட்ட வடுவூர் கே.துரைசாமி ஐயங் கார் இன்றைய தலைமுறை வாசகர்களாலும் பரவலாக அறி யப்பட்டவர். ஜேம்ஸ் பாண்ட், ஷெர்லக் ஹோம்ஸிற்கு இணை யாக புகழ்பெற்றது அவர் படைத்த திகம்பரசாமியார் என்ற கதாபாத்திரம். நவராத்திரி சிவாஜிகணேசனும், தசாவதாரம் கமலும் தாம் பூண்ட வேடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இன்றும் புகழப் படுகின்றனர். ஆனால் இவர்களின் முன்னோடி எம்.என். நம்பியார் என்பது பலர் அறியாதது. வடுவூராரின் கும்பகோணம் வழக்கறிஞர் என்ற நாவல் திகம்பரசாமியார் என்ற பெயரில் திரைப்படமானபோது நம்பியார் பதிமூன்று வேடங்கள் வரை ஏற்று நகாசு வேலை செய்திருப்பார். அத்தனையும் தத்ரூபமாக பொருந்திப் போயின என்பது உண்மை. ஆரணியாருக்கு சற்றும் சளைத்தவரல்லர் வடுவூரார். பட்டியலைப் பாருங்கள்.

பூர்ண சந்திரோதயம் – 5 பாகங்கள்
சௌந்தரகோகிலம் – 4 பாகங்கள்
மாயா விநோதப் பரதேசி – 3 பாகங்கள்
மதன கல்யாணி – 3 பாகங்கள்
மேனகா – 2 பாகங்கள்

இவை தவிர சிறிதும் பெரிதுமாக ஒற்றைப்புத்தகமாக பல நாவல்கள் என வரலாறு படைத்தவர் வடுவூரார். பெரும்பாலும் துப்பறியும் நாவல்கள். ரெய்னால்ட்ஸ் என்ற எழுத்தாளரின் நாவல்களின் தழுவல்கள்.

1800ஆம் ஆண்டு மன்னார்குடி மாவட் டத்தில் வடுவூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வடுவூர். கே.துரைசாமி ஐயங்கார் பி.ஏ. படித்தவர். எழுத்தை மட்டுமே ஜீவனமாகக் கொண்டவர். சொன்னால் நம்பமாட்டீர்கள். சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் அந்தக்காலத் திலேயே பத்தாயிரம் ரூபாய் செலவில் மாளிகை கட்டிவாழ்ந்தவர் வடுவூரார். அனைத்தும் எழுதிச் சம்பாதித்தவை.மனோரஞ்சிதம் என்ற பெயரில் மாதாமாதம் நாவல்களை தொடர்ந்து வெளியிட்டார். உண்மையில் இன்றைய மாத நாவல்களின் முன்னோடி மனோரஞ்சிதம்தான்.

எகிப்தின் பாரோக்களின் வழித்தோன்றல்களே ஐயங்கார்கள் என்பதை மையமாகக் கொண்டு லாங் மிஸ்ஸிங் லிங்க் என்ற 900 பக்க ஆங்கில ஆராய்ச்சி நூலை சொந்த செலவில் அச்சிட்டு வெளி யிட முயன்றார். ஆங்கிலேய அரசு அந்த நூலை தடை செய்தது. பெரும் பொரு தார இழப்பு ஏற்பட்டு வீட்டை விற்க நேர்ந்தது. தவிர வடுவூராரின் கதையை கருவாகக் கொண்டு மைனர் ராஜாமணி என்ற படம் எடுக்கப்பட்டது. தங்களின் சாதியை வடுவூரார் இழிவு படுத்தியதாக குறிப்பிட்ட பிரிவினர் கொந்தளிக்க வடுவூரார் குருதிக்கொதிப்பில் மாண்டதாக க.நா.சுப்ரமண்யம் கூறுகிறார். எந்த பிரச்னை எப்போது விஸ்வரூபம் எடுக்கும் என யார் அறிவார்?

– கோ.எ.பச்சையப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here