கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம்!

0
43

தமிழகத்தின் கடைகோடியில் உள்லா கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக கட்டபட்டு உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ் தானம் சார்பில் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் 22.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அன்றே மூலஸ்தான கருவறையில் ஏழரை அடி உயரத்தில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை போன்று மூன்றரை அடி உயரத்தில் பத்மாவதி தயார் சிலையும், மூன்றரை அடி உயரத்தில் ஆண்டாள் சிலையும், மூன்று அடி உயரத்தில் கருட பகவான் சிலையும் பிரிதிஷ்டை செய்யபட்டது.

ஐந்து நாட்கள் தொடர் பூஜைகளுக்கு பின்னர் திருமலை திருப்தி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சேஷாத்திரி தலைமையில் 60 அர்ச்சகர்களால் இன்று கும்பாபிஷேகம் நடத்தபட்டது. இன்று அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சுவாமி சன்னதி, பத்மாவதி தயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதிகளில் உள்ள கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்ற பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நன் பகல் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் கோவில் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். இன்று மாலை 4 மணி முதல் 5.30 வரை ஸ்ரீனிவாச திரு கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கோயிலின் கீழ்தளத்தில் ஸ்ரீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதுதவிர தேரோடும் 4 மாட வீதிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் தங்கும் வீடுகள், முடிகாணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மண்டபம், கார் பார்க்கிங் வசதி, கழிப்பறை வசதி, இணைப்பு சாலைகள், அலங்கார தோரண நுழைவு வாயில், கோசாலை, தெப்பக்குளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here