மோடி அரசு அராஜகமா நடக்குது! – மம்தா ஆவேசம்!

0
42

மேற்கு வங்கத்தில் அராஜகத்தை மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டதாகவும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க தர்ணாவிலும் ஈடுபடுவேன் என்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கமிஷனர் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்ததை தொடர்ந்து, மாநில டிஜிபி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் மேயர் ஆகியோர் கமிஷனர் ராஜிவ் சுக்லா வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மம்தா, அரசியில் பழிவாங்கும் செயலில் மோடியும், அமித்ஷாவும் ஈடுப்பட்டுள்ளதாக மம்தா கண்டனம் தெரிவித்தார். பிரதமரின் தூண்டுதலின் பேரிலேயே சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக ம்மதா புகார் கூறினார். மேற்கு வங்காளத்திற்கு பா.ஜனதா தொல்லை கொடுக்கிறது. அவர்கள் வலுக்கட்டாயமாக மேற்கு வங்காளத்தை அழிக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பிரதமர் மோடி நேற்று மிரட்டியதை நீங்கள் பார்த்து இருக்கலாம். இப்போதும் சொல்வேன் ராஜீவ் குமார் இந்த உலகத்திலே சிறந்தவர் என்று.பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாகும். நீங்கள் எந்த ஒரு நோட்டீசும் கொடுக்காமல் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு வந்துள்ளீர்கள். எங்களால் சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய முடியும், ஆனால் நாங்கள் செய்யவில்லை. என்னுடைய படைகளுடன் நான் உள்ளேன். அவர்களுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். அரசியல் சட்டத்தை பாதுகாக்க தர்ணாவிலும் ஈடுபடுவேன் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here