விஜயகாந்த் தனது திருமண நாளை அமெரிக்கா கேக் வெட்டி கொண்டாடினார்!

0
41

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் 29-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்திற்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால், அவரது உடல்நிலை முழுதாக சரியாகவில்லை. இதனால், கடந்தாண்டு ஜூலை மாதம் அமெரிக்கா சென்று சில மாதங்களுக்குப் பிறகு திரும்பினார். விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது மனைவி பிரேமலதா மற்றும் மகன் கட்சியை கவனித்துக்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இரண்டாவது முறையாக டிசம்பர் மாதம் மீண்டும் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். எனினும், அங்கிருந்த படியே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார். அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய 29-ம் ஆண்டு திருமண விழாவையொட்டி அவர் குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here