கடைநிலை ஊழியர்களை கவனிப்பது யார்?

0
34
தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றிவரும் பலருக்கும் மாத சம்பளமே ரூ.720 தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தினக்கூலிக்காரர்களிலேயே ரூ.500-க்கு குறையாமல் யாரும் வருவதில்லை என்ற நிலையில், மாதம் ரூ.720 ஊதியம் என்பது எந்த வகையிலும் ஏற்கவே முடியாதது.
இந்த  ரூ.720 ஊதியமும் பல பள்ளிகளில் பல மாதங்களாக வழங்கப்படாததால் துப்புரவு பணியாளர்கள் பலரும் வேலைக்கே வருவதில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுமாதிரி பள்ளிகளில்தான் மாணவர்களையே கழிவறைகளை துப்புரவு செய்யும்படி ஆசிரியர்கள் ஏவும் அவல நிலை நிகழ்கிறது.
கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை ஏவினால் கடும் தண்டனை என்று உத்தரவு பிறப்பிப்பதை விட எல்லா பள்ளிகளிலும் துப்புரவாளர்கள் இருக்கிறார்களா, அவர்களுக்கு ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என்பதை கவனிப்பது முக்கியம்.
உடனடியாக அனைத்து பள்ளிகளிலும் துப்புரவாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்வதுடன் காலத்திற்கு ஒத்துவராத ரூ.720 ஊதியம் என்பதை மாற்றி அவர்களுக்கும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களைப்போல் சில ஆயிரம் ரூபாயாவது ஊதியம் வழங்கப்பட்டால் மட்டுமே மாணவ, மாணவிகளை கல்வி தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத்தும் அவல நிலை நிகழாமல் தடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here