0
31
சந்தடி சாக்கில் சத்தமே இல்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிவிட்டாராம்… என்றபடியே உள்ளே வந்தார் மதியார்.
-வாருங்கள் மதியாரே… இது எந்த தரப்பு தகவல்? சந்தடி சாக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியவர் யாராம்? இடையூறு இல்லாமல் எப்படி அவரால் இதை சாதிக்க முடிந்ததாம்? விவரமாக சொல்லுங்களேன்…
கதர்தரப்பில் மாநில தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதலே அனைத்து தலைவர்களும் அவருக்கு எதிராக கொடிபிடிக்க ஆரம்பித்தார்களாம். கட்சியை அடிப்படையில் இருந்தே பலப்படுத்துவதாக சொல்லிக்கொண்டு ஊர், ஊராக இருந்த மற்ற கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்களை எல்லாம் ஓரங்கட்ட ஆரம்பித்தாராம். கடைசியில் தங்களுக்கு ஆதரவு தளமே இல்லாமல் போய்விடுமே என்று அவர்கள் இவருக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட ஆரம்பித்தார்களாம்.
-எந்த தலைவர் பதவிக்கு வந்தாலும் தனது ஆதரவாளர்களை திணிப்பதும், மற்ற தலைவர்களின் ஆதரவாளர்களை ஓரங்கட்டுவதும் வழக்கம்தானே… இதில் திருநாவுக்கரசரை மட்டும் எப்படி குறைசொல்ல முடியும்?
பிரச்னை என்னவென்ƒல் கமிட்டிகளில் எல்லாம் தங்கள் ஆதரவாளர்களை அந்தந்த தலைவரும் நியமிப்பார்கள். ஆ„ல் ஒவ்வொரு கோஷ்டி தலைவருக்கும் நெருக்கமான சில முன்„ள் எம்எல்ஏ, எம்பி என்று பிரபலமாக இருப்பார்கள். அவர்கள் மீது எல்லாம் புதிய தலைவர் கைவைக்க மாட்டார். ஆ„ல் திருநாவுக்கரசரோ நடப்பு எம்எல்ஏ, பழைய எம்எல்ஏ என்றெல்லாம் பார்க்காமல் எல்லா கோஷ்டிகள் மீதுமே நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தாராம். இப்படியே போ„ல் மாநில கதர் கட்சி முழுமையாக அவரது பாக்கெட்டுக்குள் போய்விடுமோ என்று மற்ற தலைகள் கலங்கும் அளவுக்கு நிலைமை இருந்ததாம்.
-பொதுவாக கதர்தரப்பில் இருக்கும் தலைகள் எல்லாம் கதர் அரசியலில் ஊறியவர்கள். திருநாவுக்கரசர் கழக அரசியலில் ஊறியவர். ஊடகங்களை கையாள்வது முதல் களத்தில் இறங்கி வேலை செய்வது வரை பழக்கப்பட்டவர். அதுதான் இவர்கள் எல்லோரையும் பயமுறுத்தியது என்பதுதானே உண்மை.
எது எப்படியோ, இவரை எப்படியும் மாற்றியே தீருவேன் என்றெல்லாம் இளங்கோவன் முதற்கொண்டு பலரும் சவால் விட்டு டெல்லிக்கு படையெடுத்தார்களாம். ஆ„ல் அதெல்லாம் எதுவும் வேலைக்கு ஆகவில்லையாம். இந்த நிலையில் சிவகங்கைக்காரர் சத்தமில்லாமல் களமிறங்கி„ராம். கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும், வேட்பாளர் தேர்வுக்கும் கதர் மேலிடம் நியமித்த குழுவில் இவரும் இடம்பெற்ƒர் இல்லையா? அதை பயன்படுத்தி எதிர்தரப்பு தலைமையுடன் பேச்சு நடத்தி„ராம்.
-புரிந்துவிட்டது… மாநில கதர் தலைவராக திருநாவுக்கரசர் இருப்பதை எதிர்தரப்பு தலைகள் ஏற்கவில்லை என்று சொல்லியிருப்பார்? இவராலேயே கூட்டணியில் நெருடல் நீடிக்கிறது என்றும் பற்றவைத்திருப்பார், அப்படித்தானே?
அவர் அந்த மாதிரி சொல்லவில்லையாம். கதர் தொண்டர்கள் மற்றும் எதிர்தரப்பு தொண்டர்களிடையே இணக்கம் இல்லை என்றும், இப்படியே இருந்தால் தேர்தல் என்று வரும்போது எதிர்தரப்பு தொண்டர்கள் நமது வெற்றிக்கு பணியாற்ற மாட்டார்கள் என்றும் சொன்„ராம். கூட்டணியில் எவ்வளவு இடம் வாங்குகிnƒம் என்பது மட்டும் முக்கியமில்லை, அதில் எவ்வளவு இடங்கள் வெற்றிபெறுகிnƒம் என்பதும்தான் முக்கியம், இதற்கு மற்ற கட்சி தொண்டர்களின் ஒத்துழைப்பு ரொம்பவே தேவைப்படும் என்று எடுத்து சொன்„ராம்.
-சுருக்கமாக சொன்„ல் திருநாவுக்கரசர் தலைமையில் தேர்தலை சந்தித்தால் கதர் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் எதிர்தரப்பு தொண்டர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்று சொல்லியிருக்கிƒர். அதுதான் சரியானபடி வேலை செய்திருக்கிறது என்கிறீர்கள்.
இத„ல்தான் எதிர்தரப்பையும் திருப்தி செய்யும் வகையில் அதிரடியாக முன்னறிவிப்பின்றி திருநாவுக்கரசரை கட்சி மேலிடம் நீக்கியதாம். அதிலும் இந்திரா காந்தி பாணியில் இரவு நேரத்தில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்ததாம். மறுநாள் காலை ஊடகங்களில் பார்த்துதான் கதர் தலைகளிலேயே  பலரும்  திருநாவுக்கரசர் நீக்கம் பற்றி தெரிந்துகொண்டார்களாம்.
-திருநாவுக்கரசர் நீக்கம் என்பது அவர்கள் கட்சியின் உள் விவகாரம். ஆ„ல் பிரபலமான பல தலைகள் இருக்கும்போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு அழகிரி என்பவரை மாநில தலைவராக நியமித்திருக்கிƒர்களே?
கொஞ்சம் பிரபலமான யாரை நியமித்தாலும் இருக்கும் கோஷ்டிகளுடன் மற்றொரு புதிய கோஷ்டிதான் உருவாகும். அதைவிட இரண்டாமிட தலைகளில் ஒருவரை நியமித்தால் அவர் எல்லா கோஷ்டிகளையும் அரவணைத்து செல்பவராக இருப்பார் என்று நினைத்து அழகிரியை நியமித்தார்களாம்.
-கே.எஸ்.அழகிரி சிவகங்கைக்காரரின் ஆதரவாளர் என்கிƒர்களே?
சந்தடி சாக்கில் அனைத்து தரப்பையும் அரவணைத்து செல்லக்கூடியவர்கள் என்று ஒரு பட்டியலை சிவகங்கைக்காரர் நீட்டிவிட்டாராம். இதில் யாரையாவது போடுவார்கள் என்று அவர் நினைத்திருந்தாராம். ஆ„ல் பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் அவர் சொன்னவர்களில் ஒருவரை மாநில தலைவராகவும், சிலரை செயல் தலைவர்களாகவும் நியமித்துவிட்டார்களாம். நியமிக்கப்பட்டவர்களில் ஓரிருவர்தான் பொதுவானவர்களாம். ஏறக்குறைய மற்ற அனைவருமே  சிவகங்கைக்காரரின் ஆதரவாளர்கள்தா„ம். இத„ல் மாநில கதர்தரப்பே  சிவகங்கைக்காரர் கைக்குள் போய்விட்ட மாதிரிதான் என்கிƒர்களாம். கடைசியாக ஒரு தகவல்… சூப்பர் நடிகர் மன்ற நிர்வாகி இளவரசனை அதிரடியாக நீக்கியதையடுத்து ஏற்கெனவே இருந்த நிர்வாகி ராஜூ மகாலிங்கம் பல மாதங்களுக்கு பிறகு நடிகரை வீட்டுக்கு வந்து பார்த்தாராம். முன்னதாக நடிகரின் குடும்பத்தாரை சந்தித்துn பசிவிட்டுதான் இவரிடம் வந்தாராம். இத„ல் குடும்பத்தாரின் ஆசியுடன் மீண்டும் இவரே சூப்பர் நடிகரின் மன்ற நிர்வாகியாக மீண்டும் வரக்கூடும்  என்கிƒர்களாம். அவ்வளவுதான் தகவல்கள்… என்றபடியே விடைபெற்ƒர் மதியார்.
திருநாவுக்கரசர் அதிரடி
மாற்றத்தின் பின்னணி
ரஜினி குடும்ப ஆசியுடன்
மீண்டும் வருகிƒர் ராஜூ
ரஜனி, தருநாவு
SHARE
Previous article
Next article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here