0
35

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது நேற்று(பிப்ரவரி 5) போப் பிரான்சிஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் இதர பாலியல் தொந்தரவுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு போப் பிரான்சிஸ் பதிலளித்தர். “சில பாதிரியார்கள்,பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். பிரச்சனை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். புதிதாக சபை கூடும் இடங்களில்தான் இது அதிகமாக நடக்கிறது. இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் பல போதகர்களை வாடிகன் தலைமையகம் நீக்கியுள்ளது. இந்த பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வை கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். கன்னியாஸ்திரிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்காக வாட்டிகன் நீண்ட காலமாக போராடி வருகிறது. இது போன்ற கொடுமைகளை முற்றிலும் தடுக்க இன்னும் அதிகமாக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.

கடந்த வாரம் வாட்டிகனில் இருந்து வெளியாகும் பெண்களுக்கான நாளிதழ் ஒன்றில் பிஷப்புகள், கன்னியாஸ்திரிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் கட்டாயக் கருக்கலைப்புக்கு வற்புறுத்தப்படுவதாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் கடந்தாண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராயர் பிராங்கோ முல்லகலை, கன்னியாஸ்திரிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பிறகு வாடிகன் தலைமையகம் பதவிநீக்கம் செய்தது. கேரள அரசும் அவரை கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

SHARE
Previous article
Next article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here