0
29

தர நிறுவனங்களில் ஊழல் ஒழிக்கப்படுமா?
நாட்டின் அந்நிய செலாவணிக்கு ஏற்றுமதி மிக முக்கியம். அந்த வகையில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வெண்டைக்காய், மிளகாய் போன்றவற்றில் பூச்சி மருந்து நச்சுக்களின் தாக்கம் இருப்பதாகவும், இத„ல் ஏற்றுமதி ஒப்பந்தத்தையே ரத்து செய்ய நேரிடும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், குறிப்பாக உணவு தானியங்கள் போன்றவை மிக கடுமையான தர சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதற்கான நிறுவனங்களின் தர சான்றிதழுடன்தான் அவை ஏற்றுமதியே செய்யப்படும். அவ்வாறு தரச்சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அயல் நாடுகளிடம் இருந்து இத்தகைய எச்சரிக்கை வருகிறது என்ƒல் தரச்சான்றிதழ்கள் வழங்கப்படும் இடத்தில் ஊழல், பாரபட்சம் போன்றவை நடைபெற்றிருக்கவேண்டும் என்ƒகிறது.
தர நிறுவனங்களில் உள்ளவர்களிடம் பேரம் செய்து, நச்சுத்தன்மை அதிகம் உள்ள காய்கறிகளை எந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்தன என்று கண்டறிந்து அந்த நிறுவனங்களின் பொருட்களுக்கு தடையும், அவற்றிற்கு தண்டனையும் விதிக்கப்பட வேண்டும். தவிர, ஊழலுக்கு துணைபோன அதிகாரிகள் யார் என்பதையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உள்நாட்டு ஊழல்களைவிட ஏற்றுமதி உள்ளிட்ட ஊழல்களால் நாட்டின் பெயர் கெடுமேயா„ல் அது சர்வதேச அளவில் நாட்டின் அந்நிய செலாவணி வருவாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நாட்டின் நற்பெயருக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இனி ஒருமுறை இத்தகைய நோட்டீஸ் பிறப்பிக்கப்படாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய உள்துறை, வெளி விவகாரத்துறை மற்றும் அயல்நாட்டு வர்த்தகத்துறை ஆகியவற்றின் உடனடி கடமையாகும்.

SHARE
Previous article
Next article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here