இலக்கியத்தில் மறுமலர்ச்சி…!

0
183

தமிழ் இலக்கிய உல கில் இப்போதெல்லாம் பின் நவீனத்துவம் என்ற வார்த்தை அடிக் கடி பயன் படுத்தப்படுகிறது. இந்த பின் நவீனத்துவம் மேலை நாட்டு இலக்கிய உலகில் என்றோ ஆரம்பமாகி ஒரு நூற்றாண்டுக்குப்பின்னரே நம் நாட்டிற்குள் எட்டிப் பார்த்துள் ளது.தொடக்க காலத்தில் வெறும் புராணக்கதைக ளும், மதம் சம்பந்தமான கதைகளும் மட்டுமே உலன் எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. 17ம் நூற்றாண்டில் ஐரோப் பாவில் அரசியல், தொழில், சமூகம் என அனைத்திலும் ஏற்பட்ட மறுமலர்ச்சி இலக் கிய உலகையும் தொற்றிக் கொண்டது. இதற்கு முதலில் பிள்ளை யார் சுழி போட்டவர் டேனியல் டீபோ. இவர் எழுதிய ராபின்சன் குரூஸோ நாவல் தான் புதிய கதவை திறந்தது.

வணிகக் கப்பலில் பய ணம் செய்த ராபின்சன் குரூஸோ கப்பல் கடலில் மூழ்கி அவன் ஒருவன் மட் டும் ஆளில்லாத ஒரு தீவில் நீந்தி கரையேறுகிறான். இருக்கும் சில பொருட்களை வைத்துக்கொண்டு அவன் எப்படி அங்கே தன் வாழ்வை கழிக்கிறான் என் பதுதான் கதை. படித்த அனை வருக்கும் பரபரப்பையும், ரசனையையும், இதேபோல் தாங்களும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தையும் ஊட்டிய கதை இது.

இதைத்தொடர்ந்து முத்து தீவு என்ற பெயரில் பேலண்டைன் எழுதிய நாவல் வெளியா னது. இதில் மூன்று பேர் ஒரு தீவில் சிக்கிக்கொண்டு வாழ்க்கை சிக்கல்களை எதிர் கொள்வது தான் கதை. இதையடுத்து ஆர்.எல்.ஸ்டீவன்சனின் புதை யல் தீவு கதை வெளியானது. எல்லா சாகஸ கதைகளுக்கும் இதுதான் முன்n„டி. இந்த கதையில் வரும் வில்லன்கேப்டன் ஹூக் தலையில் தொப்பி, தோளில் கிளி, ஒரு கையில் கைக்கு பதில் இரும்பு கொக்கி என்பது அழியா சித்திரமாக வாசகர் கள் மத்தியில் பதிந்தது.

தனி மனித சாகசங்கள் என்று அடுக்கடுக்காக கதைகள் வந்த நிலையில் பிரபல எழுத் தாளர் லூயி கரால் அதிசய உலகில் ஆலிஸ் என்ற கதையை எழுதினார். மாய, மந்திரங் கள் என்றில் லாமல் அதே சமயம் விந் தையான ஒரு உலகம் அந்த கதையில் கண் முன்னே விரியும்.

முயல் ஒன்றை தொடர்ந்து ஓடிய ஆலிஸ் சுரங்கத்தின் வழியே வேறு ஒரு உலகத்தில் விழுவாள். அங்குள்ள ஒரு விசித்திர மான திரவத்தை குடித்ததும் மூன்று அங்குலமே உயர முள்ள சிறு பெண் ஆகிவிடு ள். பின்னர் அங்குள்ளவேறு ஒரு ரொட்டியை சாப் பிட்டபோது கூரையை முட் டும் அளவுக்கு பிரமாண்டமாக வளர்வாள். படித்த அனை வரையும் கவர்ந்த இந்த கதை இங்கிலாந்து நாட்டு ராணி எலிசபெத்தையே சற்று நேரம் குழந்தையாக்கிவிட்டது. சம்பந்தப்பட்ட பதிப்பகத் திற்கு கடிதம் எழுதிய ராணி, ‘என்னை யே குழந்தையாக மாற்றிவிட்ட இந்த எழுத்தாளரின் அடுத்த புத்த கத்தை எனக்கு அவசியம் அனுப்பவும்’ என்று எழுதி னார். அதன்படியே அந்த எழுத்தாளரின் அடுத்த புத்தகம் அவருக்கு அனுப்பப்பட்டது. ஆர்வத்துடன் புரட்டிப்பார்த்த ராணியின் முகம் சுருங்கியது. காரணம், அது ஒரு கணித நூல்.

இந்த நாவலை எழுதிய லூயி கரால் நிஜத்தில் ஒரு கணிதப் பேராசிரியர். அவ ரது உண்மைப்பெயர் சார் லஸ் லட்விஜ் டாஜ்சன் என்பதாகும். இந்த உண்மை தெரிய வந்த போது ராணி மிகவும் ஆச்சரியப்பட்டார். கடினமான கணக்கை கற் பிக்கும் பேராசிரியர் குழந்தைகளை கவரும் அளவிற்கு எழுதும் ஆற்றலும் படைத்தவரா என்று மனம் திறந்து பாராட்டினார்.

அந்த காலகட்டத்தில் வெளியான எல்லா கதைகளி லுமே கதாநாயகன் சகலகலா வல்லவனாக இருப்பான். எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து உறுதியாக முன்னேறி கடைசியில் வெற்றியை நிலைநாட்டு வான். இந்த காலத்திய எம்ஜிஆர், அமிதாப், ரஜினி போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடிகள் இந்த நாவல்களே.

எல்லா கதைகளிலுமே இந்த மாதிரி சாகஸ கதா நாயகர்களே காணப்பட்டதால் கடுப்பான சர்வாண் டிஸ் என்ற எழுத்தாளர் டான் குவிக்ஸாட் என்ற நாவலை படைத்தார். இந்த நாவலின் கதாநாயகன் மூலம் எல்லா கதாநாயகன் களையும் அவர் கடுமையாக கிண்டல் செய்திருப்பார். இதை பின்பற்றி தமிழில்கூட வத்தல் குதிரை மேல் தொத் தல் வீரன் என்ற ஒரு நகைச் சுவை கதை வெளியானது. ஒருபுறம் நாவல்கள் சக்கைப்போடு போட்ட அதே காலத்திலேயே ஏகப் பட்ட சிறுகதைகளும் வெளி யாயின. மறுமலர்ச்சி என்ப தற்கு உதாரணமாக ஏசுவை யும், மக்தலே„ மரியாளை யும் சேர்த்து விதவிதமான கதைகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தின. சிறு கதைத்துறையில் பல்வேறு புதிய யுக்திகளும் அந்த காலகட்டத்தில் கையாளப் பட்டன.

ஒரு சிறுகதையில், முதல் பகுதியில் ஒரு கதை இருக்கும். இரண்டாம் பகுதியில் வேறு ஒரு கதை இருக்கும். மூன்றாவது பகு தியில் இந்த இரண்டு கதைகளையும் இணைப் பது போன்ற கதை இடம்பெறும். பின்„ளில் தமிழில் எழுத்தாளர் சுஜாதா ஒரு கதையில் இரண்டு கதைகள் என்ற பெயரில் இதே பாணியில் ஒரு சிறுகதை எழுதினார்.

வேறு ஒரு சிறு கதை யில், 7 பகுதிகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே படித்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறுகதையாக இருக்கும். அதே சமயம் சேர்த்து படித்தால் இவை அனைத்தும் இடம்பெற்ற ஒரே சிறு கதையாக அது வடிவெடுக்கும்.

சின்ன சிறுகதை என்ற பெயரில் 10 வரிகளுக்குள் கதை எழுதுவது, 5 வரிகளில் அடங்குவது போல் கதை எழுதுவது என்றெல்லாம் பல வகைகளிலும் எழுத்தாளர்கள் வித்தை காட்டி னார்கள். அந்த வகையில் உலகத்தின் மிக, மிக சிறிய சிறுகதை என்று ஒன்று வெளி யாகி பல லட்சம் வாசகர் களின் பாராட்டைப் பெற்றது. மூன்றாம் உலகப்போ ரில் அணுகுண்டு மழையால் அனைத்து ஜீவராசிகளும் அழிந்த நிலையில், ஒரே ஒருவன் மட்டும் எஞ்சியி ருப்பா„ம். அவனை வைத்து எழுதப்பட்ட கதை அது. அந்த கதையில் வரும் வரிகளே இவைதான்-

‘உலகத்தின் கடைசி மனிதன் அறைக்குள் தனியாக அமர்ந்திருந்தான். அறைக் கதவு தட்டப்பட்டது’

இந்த ஒரேயொரு சிறுகதையை வைத்து அறைக்கதவு தட்டப்பட்டது எதனால் என்பதை வைத்தே பல்லாயிரக்கணக்கான யூகங்கள் கதைகளாக வந்து விட்டன. ஜென் கதையில் வரும், வாங்க டீ சாப் பிடலாம் என்கிற மாதிரி முடிவே இல்லாத யூகங்கள் இன்னும் வந்தபடி உள்ளன.

விஞ்ஞான சிறுகதை ஒன்றில் இரண்டு பேர் கால எந்திரத்தில் ஏறி கி.பி. 1-ம் ஆண்டிற்கு செல்வார்கள். இயேசு என்பவர் சிலுவை யில் அறையப்பட்டதால் தான் அந்த மதம் உலகெங்கும் பரவியது. அந்த காலத்திற்கே சென்று அது நடை பெறவிடாமல் தடுத்து விட் டால், தங்கள் நூற்றாண்டிற்கு திரும்பிவரும்போது உல கில் கிறிஸ்தவ மதமே இருக் காது என்ற நோக்கத்துடன் அவர்கள் செல்வார்கள். கடைசியில் அவர்கள் இருவர் தான் இயேசுவின் இரு பக்கங்களிலும் தொங்க விடப்படுவார்களாம். இயேசு இவர் களைப் பார்த்து, பிதாவே! தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை அறியாத அப்பாவிகள். இவர்களை மன்னியும் என்பாராம்.

இப்படி எல்லா துறைகளிலும் சிறுகதை எழுத் தாளர்கள் தங்கள் கற்பனை சிறகுகளை விரித்து என்றோ எல்லை தாண்டி பறந்துள்ளனர். ஆனால் நமது தமிழ் சிறுகதை உலகில் இன்னும் வரையறுக்கப்பட்ட எல்லைகளைக்கூட யாரும் இன்னும் தாண்ட வில்லை.

ஆர்.ஆர்.கே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here